கல்வி நிறுவன வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்தது.
அதில் பள்ளி வாகனத்தில் உதவியாளர் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். பள்ளிகள் அளவில் பேருந்து குழுவை ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி வாகனங்களை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட 11 புதிய விதிமுறைகளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் வாகன பராமரிப்புக்காக ஒவவொரு பள்ளியிலும் சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.