மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இரவு நேரத்தில் மீண்டும் காடையர்களின் அட்டகாசம்!
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் தற்போது மீண்டும் காடையளர்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக குறித்த பிரச்சினைகள் இல்லாத நிலையில் காணப்பட்டது.தற்போது மீண்டும் இந்த பிரச்சினை தலைதூக்கிஉள்ளதாக சமூக ஆர்வலர்களும்மக்களும் தெரிவித்துள்ளனர்.
மாலை 7 மணிக்கு பின் குறித்த பகுதிக்கு வரும் காடையர் குழுவினர் அங்கு பேரூந்திற்காக காத்து நிற்கும் பெண்களுடன் ஆபாசமாக கதைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு சில இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் வந்து பெண்களை வாங்க உங்களை ஏற்றிக்கொண்டு போய் வீட்டில் விடுகின்றோம்என பலவந்தப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எனவே உரிய அதிகாரிகள் இவ்விடையத்தில் தலையிட்டு குறித்த பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வை பெற்றுக்கொடுக்குமாறும் சமூக ஆர்வலர்கள் கோறிக்கை விடுவதோடு குறித்த இளைஞர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதால் பொலிஸாரினால் இவர்கள் தோடப்பட்டு வரும் நிலையில் பகல் நேரங்களில் தலைமறைவாகியும் இரவு நேரங்களில் இவர்கள் நடமாடித்திரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இரவு நேரத்தில் மீண்டும் காடையர்களின் அட்டகாசம்!
Reviewed by கவாஸ்கர்
on
11:52:00
Rating: 5