நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், நிலக்கரி சுரங்கங்கள் அமைக்காமல் உள்ள 58 நிறுவனங்களுக்கான உரிமங்களை ரத்து செய்வது குறித்து 6ம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு நிலக்கரித்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
எஃகு அல்லது மின் உற்பத்திக்காக உரிமம் பெற்று, நிலக்கரி சுரங்கங்களை அமைக்காமல் உள்ள 58 நிறுவனங்களின் பட்டியலை தயாரித்த, அமைச்சரவை குழு, அவற்றுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிறுவனங்களுக்கான உரிமங்களை ரத்து செய்வதில் நிலக்கரித் துறை அமைச்சகம் விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் கருதுவதாக தெரிகிறது.
எனவே, நிலக்கரி வெட்டி எடுக்காத சுரங்களுக்கான உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை 6ம் தேதிக்குள் முடிக்குமாறு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 58 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்க, அமைச்சகங்களுக்கு இடையேயான உயர்மட்டக் குழுவின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.