ஜெனிவாவை சமாளிக்கும் பொறுப்பு ரவிநாத் ஆரியசிங்கவிடம் – அமைச்சர்கள் குழு செல்லாது
வரும் நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை குறித்து ஆராயப்படவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில் இலங்கை குழுவுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு இலங்கையின் இருந்து அமைச்சர்களோ அல்லது மூத்த அதிகாரிகளோ செல்லமாட்டார்கள்.
ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையில் இலங்கை சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளே இந்தக் கூட்டத்தில் பங்கேற்பர் என்று இலங்கை வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜெனிவாவில் வரும் நவம்பர் முதலாம் நாள் பூகோள கால மீளாய்வின் போது, இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை குறித்து நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில் பாதகமான விடயங்களைத் தவிர்ப்பதற்கு ஆதரவு தேடும் முயற்சிகளில் ரவிநாத் ஆரியசிங்க தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அவர் கடந்த ஐந்து வாரங்களாக ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதிகளை தொடர்ச்சியாக சந்தித்துப் பேசி வருகிறார்.
ஐ.நா மனிஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் உள்ளிட்ட 50 நாடுகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த நாடுகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாவை சமாளிக்கும் பொறுப்பு ரவிநாத் ஆரியசிங்கவிடம் – அமைச்சர்கள் குழு செல்லாது
Reviewed by கவாஸ்கர்
on
09:59:00
Rating: 5