இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா, தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்று அந்த நாட்டுக்கான தூதர் பிரசாத் கரியவாசம் அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இலங்கை வடகிழக்கு மாகாணங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்றார்.
இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இறுதிப் பட்டியல் தயாரான பின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கரியவாசம் கூறினார்.
தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட நைலான் வலைகளை பயன்படுத்தி, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
எனினும், அவர்களை தாக்கக்கூடாது என இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கரியவாசம் தெரிவித்தார்.