ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜித்பூர் மற்றும் லோகரி நிலக்கரி சுரங்கத்தின் பணிகளைச் சரிவர மேற்கொள்ளாததால் ஜே.எஸ்.பி.எல். மற்றும் உஷா மார்ட்டீன் ஆகிய இரு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
அமைச்சரவை குழுவின் சமீபத்திய மறுஆய்வின்போது மேற்கூறிய இரு நிறுவனங்களின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நிலக்கரி உரிமம் பெற்றுள்ள இடங்களில் இந்த இரு நிறுவனங்களும் பணிகளை மேற்கொள்ளாததால், அவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மறுஆய்வின்போது திரும்பவும் இந்த இரு நிறுவனங்களின் பெயர்களும் பரிசீலனைக்கு ஏன் எடுத்துக் கொள்ளப்பட்டது என்று நிலக்கரித் துறையின் கூடுதல் செயலாளர் ஜோஹ்ரா சாட்டர்ஜியும் நிலக்கரித் துறை செயலாளர் எஸ்.கே. ஸ்ரீவத்சவாவும் கேள்வி எழுப்பியுள்ளதாக நிலக்கரித் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.