கோவை மாவட்டத்தில் அன்னூர் பகுதியில் பெண்மணி ஒருவர் தனது 2 வயது நிரம்பிய பெண் குழுந்தையை கிணற்றில் வீசி எறிந்து கொன்றுள்ளார்.
அந்த பெண்ணிற்கு 2வது திருமணம் செய்து வைக்க அவளது பெற்றோர் முடிவு செய்த நிலையில் மணமகன் வீட்டார், வருங்கால வாழ்க்கைக்கு குழந்தை தடையாக இருக்கும் என கூறியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்தே குழந்தையை கிணற்றில் வீசும் முடிவுக்கு அந்த பெண் வந்துள்ளதாக விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்தனர்.