ஈழத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதில் விருப்பங்கொண்டுள்ள தமிழ்நாட்டு தமிழர்கள்
இந்தியத் தமிழ் மக்கள் இலங்கையில் வாழும் தமது சகோதரர்களாகிய ஈழத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதில் விருப்பங்கொண்டுள்ள போதிலும், தனித் தாய்நாடு உருவாகுவதை ஆதரித்து மேற்கொள்ளப்படும் பழைய பரப்புரை நடவடிக்கைக்கான முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கையின் வடக்கு கிழக்கில் தனித் தாய்நாடு ஒன்றை உருவாக்குவதை ஆதரித்து 1980களில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர் அமைப்பானது [TESO] தற்போது கடந்த நான்கு மாதங்களாக மீண்டும் புத்துயிர் பெற்று செயற்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த அமைப்பானது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கருத்தரங்கு ஒன்றை மேற்கொள்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் தமிழ்நாட்டு அரசாங்கம் ஆகியவற்றுடன் விவாதத்தில் ஈடுபட்டது.
இறுதியில் ஆகஸ்ட் 12 அன்று இக்கருத்தரங்கு மேற்கொள்ளப்பட்டது. 1980களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு வழங்கப்பட்ட போதிலும், இக்கருத்தரங்கானது தமிழ்நாட்டில் சிறியதொரு அதிர்வலை காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல பத்தாண்டுகளாக யுத்தத்தில் ஈடுபட்டிருந்த புலிகள் அமைப்பு 2009ல் தோற்கடிக்கப்பட்டது.
இம்மாநாட்டிற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக இதன் ஏற்பாட்டாளர்கள் சிறிலங்காவிற்கான பிராந்திய சார் பாதுகாப்பில் இந்தியாவின் பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. தற்போதைய நிலையில் 'தமிழீழம்' என்பது தொடர்பாக இம்மாநாட்டில் வலியுறுத்துவதானது காலத்திற்குகந்த ஒன்றல்ல என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
90 வயதான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்.கருணாநிதி இம்மாநாட்டை மேற்கொள்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் முன்னிற்று செயற்பட்டுள்ளார். மாநில அரசியற் தலைவர்கள் மத்தியில் காணப்படும் 'ஒற்றுமையின்மை' இம்மாநாட்டுக்கான மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளத் தவறியமைக்கு காலாக உள்ளதாக எம்.கருணாநிதி ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
"இலங்கையின் தனித் தாய்நாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான அனுதாபத்தை தமிழ்நாட்டு வாழ் தமிழீழ ஆதரவாளர்கள் வழங்குவதானது ஒரு தவறான கருத்துருவாக்கமாகும்" என ஜனதாக் கட்சியின் தலைவரும் ரெசோ அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகமானது தனது அரசியல் சுயலாபத்தை வெற்றி கொள்வதற்காக இறந்து போன குதிரையின் மேலேறி சவாரி செய்வது சவுக்கடி போன்று செயற்படுவதாகவும் சுப்பிரமணியம் சுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ ஆதரவாளர் மாநாட்டிற்கு ஆதரவு திரட்டும் முகமாக திராவிட முன்னேற்றக் கழகமானது தமிழ்நாடு பூராவும் பல்வேறு நிகழ்வுகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக ஆகஸ்ட் 22 அன்று திருச்சியில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.முத்துசுவாமி விலையேற்றம் மற்றும் போக்குவரத்து அமைச்சராகத் தான் செயற்பட்ட போது சந்தித்துக்கொண்ட பழைய அனுபவங்கள் தொடர்பாக நீண்ட நேரம் உரையாற்றினார்.
உரையில் இறுதியில் தமிழீழ ஆதரவாளர் மாநாட்டின் பரிந்துரைகள் தொடர்பாகவும் அதன் அவசியம் தொடர்பாகவும் எந்தவொரு மேலதிக விளக்கங்களும் வழங்காது வெறுமனே அவற்றை வாசித்திருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள பாதுகாப்புத்துறைக் கல்லூரியில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசாங்கமானது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவரை அழைக்கவுள்ளதை எதிர்த்து இம்மாதத்தின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கடும்போக்காளர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் இது வதந்தி என்றும், பாதுகாப்பு பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்கான உடன்பாடு எட்டப்பட்ட போதிலும் அதில் இலங்கை சேர்ந்த எந்தவொரு இராணுவத்தினனும் பங்கேற்கவில்லை எனவும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி உறுதிப்படுத்தியுள்ளார்.
"தமிழ்நாட்டு மக்கள் அதிகளவு அக்கறைப்படாவிட்டாலும் கூட, அங்குள்ள அரசியல்வாதிகள் ஈழம் என்பதை மிகப் பெரிய பிரச்சினையாக முன்வைத்துள்ளமை தெளிவாகத் தெரிகிறது" என சுவாமி தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்காமையானது, தமிழ்நாட்டில் வாழும் மக்கள் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அவாக்கள் மற்றும் அவர்களின் நலன்கள் தொடர்பில் அக்கறை செலுத்தாதிருப்பதை குறிக்கவில்லை என உள்ளுர் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
"எல்லா இந்தியர்களைப் போல தமிழ்நாட்டில் வாழும் தமிழ் ஆதரவாளர்களும் தமது அயல்நாடான இலங்கையின் விவகாரத்தில் தலையீடு செய்வதில் ஆர்வங்கொண்டிருக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் இலங்கை வாழ் தமிழ் மக்கள் தமது அரசியல் அவாக்களை அடைந்து, சிறந்த வாழ்வை வாழ வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளனர்.
" என தமிழ் கல்விமானான ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதில் விருப்பங்கொண்டுள்ள தமிழ்நாட்டு தமிழர்கள்
Reviewed by கவாஸ்கர்
on
16:18:00
Rating: 5