Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பீகாரில் திருவிழாவில் கூட்ட நெரிசல்: 2 பேர் பலி

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் ராஜ்கீர் என்ற இடத்தில் நடைபெற்ற திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் கூட்டத்தை கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த தடுப்பான் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியானார்கள். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post