பெண்களும் மேல்சட்டை அணியாமல் பொது இடங்களில் வர அமெரிக்காவில் போராட்டம்
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் முன் சில ஆண்களும் பெண்களும் கூடினர். அவர்கள் ஒரு நூதனமான போராட்டத்தை முன்னெடுத்தனர். அதாவது , ஆண்களுக்கு இணையாக பெண்களும் பொது இடங்களில் மேல்சட்டை அணியாமல் சுதந்திரமாக நடமாட அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்காக பல ஆண்களும் பெண்களும் மேல்சட்டை அணியாமல் வெளியே வந்து போராட்டம் நடத்தினர். பல காலமாக இந்த கோரிக்கை அமெரிக்காவில் வைக்கப் பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் சமூகத்தில் சமம் என்றால் ஆண்களை போலவே பெண்களும் தாராளமாக உடலை காட்டிக் கொண்டு வெளியே வருவதில் என்ன தவறு இருக்கிறது என்று கருத்து தெரிவித்தனர் இந்தக் குழுவினர். இன்றோ அல்லது நாளையோ , நிச்சயம் பெண்களும் சுதந்திரமாக மேல்சட்டை அணியாமல் வெளியே வரத் தான் போகிறார்கள் என்றனர் இந்த போராட்டக் குழுவினர்.