புதுச்சேரி மாநிலத்தில் மேட்டுபாளையம் அணைக்கரை வீதி பகுதியை சேர்ந்தவர் வீரபாகு என்ற சுகுமார் (வயது 38).
இவருக்கும் மணி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வீரபாகுவை மணி மற்றும் 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் தாக்கியது. இதில் வீரபாகு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து கோரிமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.