நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்றும் பாரதீய ஜனதா கட்சி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவை இன்று கூடியதும், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். அமளியை கட்டுப்படுத்த முடியாததால் சபாநாயகர் மீரா குமார் அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையில் இதே பிரச்னை காரணமாக அவையில் குழப்பம் நிலவியது. இதனால் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 8 – ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரின் ஒன்பதாம் நாளான இன்றும் அலுவல் எதுவும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது.