Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் கனமழை சாலைகளில் வெள்ளம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. நேற்று காலையிலும் கடுமையான வெயில் நிலவிய நிலையில், மாலையில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இரவு ஒன்பதரை மணியளவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது.

புறநகரிலும் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் நீர் தேங்கி, பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை பச்சையப்பா கல்லூரி அருகே மரம் முறிந்து விழுந்ததில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ததாகவும், இன்றும் மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post