இதனால் மக்கள் மத்தியில் அச்சம் எழுவதுடன் சிலர் எதற்காகப் பதிவுகளை மேற்கொள்கிறீர்கள் எனவும் இராணுவத்தினரிடம் கேட்கின்றனர். இதற்குப் பதிலளிக்கும் இராணுவத்தினர் உங்களுக்கான வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்காகவும் மற்றும் உதவிகள் கொடுப்பதற்காகவுமே நாம் பதிவுகளை மேற்கொள்கின்றோம் எனக்கூறி குடும்பத்தவர்களைப் புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர்.
வீடில்லாத மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கவெனக் கூறி பல திட்டங்கள் முன்னெடுக்கப்போவதாகப் படையினர் உட்பட பல தரப்பினராலும் இதுவரை பல தடவைகள் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டும் உதவிகள் கிடைக்காத நிலையில் இராணுவத்தினரின் பதிவுகளால் வீடுகள் கிடைக்கப் போகின்றதா எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.