மதுரையில் நடைபெற்ற கிரனைட் முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிரனைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
முறைகேடு தொடர்பாக போலீசில் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டதையடுத்து இதுவரை 63 புகார்கள் போலீசுக்கு வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான புகார்கள் இடைத்தரகர்கள் பற்றியதாகும். தங்களிடம் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி கிரனைட் நிறுவனங்களுக்கு இடைத்தரகர்கள் விற்றுள்ளதாக பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இடைத்தரகர்கள் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சில நாட்களில் இடைத்தரகர்கள் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் கனிமவளத்துறை துணை இயக்குநர் ராஜாராம் என்பவரிடம் கிரனைட் முறைகேடு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒலிம்பஸ் என்ற நிறுவனம் உருவாவதற்கு ராஜாராம்தான் காரணம் என்று கூறப்பட்டதையடுத்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.