Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நிலக்கரி உரிமங்களுக்கு என்ன நிலை ?

தனியாருக்கு ஒதுக்கப்பட்ட 60 நிலக்கரிச் சுரங்க உரிமங்களை ரத்து செய்யலாம் என்று அமைச்சகங்கள் குழு கூறியுள்ளது.

டெல்லியின் இன்று நடைபெறும் அமைச்சகங்கள் குழுக் கூட்டத்தில் இதற்கான குறிப்பு, விவாதத்துக்கான பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. 1993-ம் ஆண்டு முதல் இதுவரை ஒதுக்கப்பட்ட 90 நிலக்கரி சுரங்கங்களில் 60 நிலக்கரிச் சுரங்கங்களை ரத்து செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சுரங்களில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் 670 கோடி டன் நிலக்கரியின் மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் என்றும் இந்தக் குறிப்பு தெரிவிக்கிறது.

நிலக்கரித் துறை இணைச் செயலாளர் ஜோஹ்ரா சாட்டர்ஜி தலைமையிலான இந்தக் குழு ஏற்கெனவே இரு முறை கூடி விவாதித்ததின் அடிப்படையில் இந்தக் குறிப்பு தயார் செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிலக்கரி உற்பத்தியைத் துவக்க முடியாது என்று கருதப்படும் அனைத்து சுரங்க உரிமங்களையும் ரத்து செய்யலாம் என்று இந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது.

இந்தக் குழு குறிப்பிட்டிருக்கும் 60 சுரங்கங்களில் 57 சுரங்கங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், 7 சுரங்கங்கள் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்திலும் ஒதுக்கப்பட்டவையாகும்.
[vuukle-powerbar-top]

Recent Post