Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்த் தேசிய போராளி முனை மழுங்கா வீரன் தமிழரசன் நினைவு நாள்




இன்று தமிழ்த்தேசிய விடுதலைப்போராளி தோழர் தமிழரசன் அவர்களின் நினைவு நாள். முனை மழுங்காப் போராளி அவர்களின் அறவாழ்வுக் காலம்: 14.4.1945 - 1.9.1987

தமிழகத்தில் முதன் முதலாக பெரும் மக்களைத்திரட்டி 1984 '' 15,16 தேதிகளில் தமிழீழ ஆதரவு மாநாடும், இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை மாநாடும்,, என்ற மாபெரும் மாநாடுகளை நடத்தியவர் தோழர் தமிழரசன் அவர்கள். தமிழ் தேசியத்தை உயிர் மூச்சாகவும் தமிழினத்தின் தேசியராக ஒன்றிணைதலை உயர் கனவாகவும் கொண்டவர். தமிழ் தேசியக் குடியரசை வென்றெடுப்பதற்காக இளைஞர் படை திரட்டி இரவு பகலாக போரிட்டவர். குடும்பத்தை பிரிந்து ஊர் ஊராக சென்று இளைஞர் படை திரட்டியவர். துரோகத்தால் ஒரு வீரனை அழித்த கொட்டம் ஆதிக்க வெறியர்களுக்கு இருக்கலாம். ஆனால் எந்த ஒரு வீரனின் மரணமும் மண்ணில் வீழ்கையில் புதைக்கப்படுவதில்லை விதைக்கப் படுகின்றது என்பதற்க்கு இன்று தமிழ் தேசியத்தின் பெயரால் ஒன்றிணைந்து வீறு கொண்டு பயணிக்கும் அனைத்து தமிழ் தேசிய மாந்தர்களும் சாட்சிகளாவர். 

** முனை மழுங்காவீரனவன்
தமிழரசன்

செவ்வணக்க கைதூக்கிச்
செங்கொடியை ஏந்திச்
சிரித்தமுக நெற்றியிலே
சிந்தனையைத் தேக்கி
முவ்வுரமும் எழுச்சியுற
முடுகிநடை யிட்ட
முனமழுங்கா வீரனவன்,
தமிழரசன்! முன்னைக்
கவ்வியுள்ள இருள்போக்கக்
காளையரைக் கூட்டிக்
கடும்பகையை எதிர்த்திடவும்
கண்விழித்து நின்றான்!
வெவ்வதிகாரக் கொடுமைச்
சூழ்ச்சியினால் வீழ்ந்தான்!

பெற்றவரை மறந்தபெரும்
வீரனவன்! பெற்ற
பெருநிலத்தைத் தாய்மொழியைப்
பேணுகின்ற நோக்கில்
உற்றதுணை யாளர்களை
உருவாக்கி சேர்த்தே
ஒரு புரட்சி செய்திடவே
ஊரூராய்ச் சென்றே
கற்றகொள்கை பரப்பியவன்
கனன்றெழுந்த போதில்
காளையவன் கலத்தினிலே
கன்னி உயிர் தந்தான்!
ஒற்றர்களால் உலுத்தர்களால்
உயிர்ப்பறிக்கப் பட்டான்!
உரிமை பெறுந்தமிழ்நாட்டில்
உயிர் வாழ்ந்து நிற்பான்

-- பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

~ ~ ~ ~
இந்திய வல்லாதிக்கத்தின் சதியால் உளவுத் துறையால்  காவல் துறையால் வஞ்சகமாக 1.9.1987 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

தோழர் தமிழரசனுடன் தர்மலிங்ம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் போன்ற தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைமைக் குழுவினர் ஐந்து பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழின விரோத வல்லாதிக்கத்திற்கெதிராய் போராடிய  ஈகையான தமிழ்த்தேசிய விடுதலைப் போராளிகள் தோழர் தமிழரசன் அவர்களையும் தோழர்களையும் என்றென்றும் நினைவில் ஏந்துவோம்...

தமிழ்த்தேசியர்களாய் ஒன்றிணைவோம்!
[vuukle-powerbar-top]

Recent Post