சம்பூர் அனல்மின் திட்டம் டிசம்பரில் ஆரம்பம்
சம்பூரில் இந்திய - இலங்கை கூட்டு முயற்சியில் அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக திட்டம் வரும் டிசெம்பரில் ஆரம்பமாகக் கூடும் என்று இலங்கை மின்சாரசபைத் தலைவர் விமலதர்ம அபேவிக்கரம தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இருந்து வெளியாகும் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இந்தத் திட்டத்துக்கான சாத்திய ஆய்வு அறிக்கை தயாராகியுள்ளது.
இரு நாட்டு அரசாங்கங்களும் செப்ரெம்பரில் மின் கொள்முதல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய உடன்பாடுகளில் கையெழுத்திட வாய்ப்புகள் உள்ளன.
அனல்மின் நிலையத்தை அமைக்கும் பணிகள் வரும் செப்ரெம்பரில் ஆரம்பிக்கப்படக் கூடும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பூர் அனல்மின் திட்டம் டிசம்பரில் ஆரம்பம்
Reviewed by கவாஸ்கர்
on
10:26:00
Rating: 5