தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்வாணையத் தலைவர் நட்ராஜ் தெரிவித்தார்.
கேள்வித்தாள்களை ஆன்லைன் மூலம் அனுப்பும் முறையால் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் நூலகர் பணியிடங்களுக்கான தேர்வு 15 மையங்களில் இரண்டாவது நாளாக இன்று நடைபெறுகிறது.
சென்னை சைதாப்பேட்டை ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற தேர்வை நடராஜ் இன்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன் லைன் மூலம் கேள்வித்தாள்களை அனுப்பும் முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.