ஈழத் தமிழர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு அரச செலவில் அனுப்ப வேண்டும்
ஈழத் தமிழர்கள் செல்ல விரும்பும் வெளிநாடுகளுக்கு அரசே செலவு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சென்னை மாவட்ட தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விருகம்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் நல உதவிகள் வழங்கி விஜயகாந்த் பேசியது,
அதிமுக ஆட்சியில் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும் என்று அமைச்சர் முனுசாமி கூறியுள்ளார். நிச்சயம் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கப் போவதில்லை.
எலிமயமான எதிர்காலம்தான் கிடைக்கும். ஒரு குழந்தையை எலி கடித்த பிறகுதான் மருத்துவமனையை அமைச்சர் பார்வையிட்டு, நாய், பூனை, எலிகளைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களைத் திறந்தவெளி முகாமுக்கு அனுப்ப வேண்டும் என்று செந்தூரன் 27 நாள்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். சிறப்பு முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு சாப்பாடு சரியில்லை என்பது உள்பட பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. அதை தீர்க்க அரசு முற்படவில்லை.
இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றால், அதை எதற்கு அரசு தடுக்க வேண்டும்? அந்தத் தமிழர்கள் விரும்பும் நாட்டுக்கு அரசு செலவு செய்து அனுப்பி வேண்டும். பிரபாகரன் உயிரோடு இருந்ததுவரை அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை. இப்போது அவர் இல்லாத நிலையில், டெசோ மாநாடு நடத்தி தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். இதனால் ஒரு பயனும் இல்லை. என்றார் விஜயகாந்த்.
ஈழத் தமிழர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு அரச செலவில் அனுப்ப வேண்டும்
Reviewed by கவாஸ்கர்
on
13:11:00
Rating: 5