Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை அகதிகள் 50 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் கைது


இந்தோனேஷிய கடற்பரப்பில் நிர்க்கதி நிலைக்குள்ளாகியிருந்த 50 இலங்கையர்களை அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக குறித்த அகதிகள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது இந்தோனேஷிய மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டு நிவாரண சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் நோக்கில் இவர்கள் பயணித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சுமாத்திரா தீவிலிருந்து சுமார் 100 கடல்மைல் தொலைவில் இவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


[vuukle-powerbar-top]

Recent Post