Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கச்சதீவு அருகே நான்கு படகுலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 28 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. மேலும் கடலில் சங்கு எடுப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை கடற்படை மிரட்டியுள்ளது.

இந்த நிலையில் சிறைபிடிக்கப்ட்ட மீனவர்கள் இராமேஸ்வர பகுதியைச் சார்ந்தவர்களா அல்லது நாகை மாவட்ட பகுதியச் சார்ந்தவர்களா என்று தெரியாமல் தமிழக மீனவர்கள் குழம்பியுள்ளனர்.

இலங்கையின் இந்த தொடர் செய்கைகளால் தமிழக மீனவர்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர்.

நன்றி - செய்தியாளர் பிரசாந்த்
[vuukle-powerbar-top]

Recent Post