இலங்கை தமிழர் பிரச்னையில் நெடுமாறனின் பேச்சுக்குத் திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் நெடுமாறன் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார் என்றும், வாய்ஜாலம் காட்டுவதை தவிர இலங்கைத் தமிழர்களுக்கு என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஆளும் கட்சியோடு இணைந்து ஏதாவது பயன் பெறுவது நெடுமாறனின் குறிக்கோள் என்றும், இலங்கைத் தமிழர்களுக்காக தாம் செய்தது பற்றி அனைவரும் நன்கு அறிவர் என்றும் தெரிவித்துள்ளார்.