புது டெல்லி 02 ஆகஸ்ட் : - இன்று நடைபெற்ற கால்பந்து இறுதிப் போட்டியில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணியை வீழ்த்தி நேரு கோப்பையை கைப்பற்றியது.
கடந்த ஆகஸ்ட் 22 தேதி தொடங்கிய இந்த நேரு கோப்பைக்கான கால்பந்து போட்டியில் இந்தியா,கேமரூன்,மாலத்தீவு,சிரியா மற்றும் நேபால் ஆகிய ஐந்து நாடுகள் கலந்து கொண்டன.இறுதியில் கேமரூன் மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகின.
இன்று நடந்த இந்த இறுதி போட்டியில் ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் இரண்டு அணிகளுமே தலா 2 கோல்கள் எடுத்து சம நிலையில் இருந்தது.பின்னர் தரப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் சம நிலைமையிலேயே இருந்தன.
பின்னர் நடைபெற்ற பெனால்ட்டி முறையில் இந்தியா முன்னேறி 5-4 என்ற வீதத்தில் கேமரூன் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இந்தியா இதோடு மூன்றாவது முறையாக நேரு கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன் 2007 மற்றும் 2009 ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் FIFA ரேங்கிங் பட்டியலில் இந்தியாவை விட அதிக புள்ளிகள் பெற்றுள்ள கேமரூன் அணியை இந்திய அணி வென்றுள்ளது என்பது சிறப்பு.மேலும் கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன.
செய்தி: பிரசாந்த் தமிழ்