வருவாய்த் துறை அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தில், மணல் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், கடலூர் மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. இதே போல், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மணல் லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மணல் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கக் கோரி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
கடந்த வாரம், கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக மணல் கொண்டு சென்ற 18 லாரிகளை வருவாய்த்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், 18 ஓட்டுநர்களையும் கைது செய்தனர்.