Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நெல்லையில் வெடிபொருள் பறிமுதல் ~ 6 பேர் கைது

நெல்லை வி.எம்.சத்திரம் அருகே, அடுக்கு மாடிக் கட்டடத்தில் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வெடிகுண்டு செய்ய பயன்படுத்திய பொருட்களும், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை மாநகரத்தில் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வி.எம்.சத்திரம் ஹசின்நகர் பிஸ்மி அடுக்கு மாடி குடியிருப்பு அருகே உள்ள பாலத்தின் கீழ் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சோதனை செய்த காவல் துறையினர் ஒரு நாட்டு வெடிகுண்டு மற்றும் வெடி பொருட்களை கைப்பற்றினர்.
[vuukle-powerbar-top]

Recent Post