பிலிப்பைன்ஸ் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 7.9 ஆக பதிவாகி உள்ளது.
பிலிப்பைன்ஸின் சமர் மாகாணத்தின் கடற்கரை நகரான கைவானில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து 750 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்க மையம் உள்ளது.
35 கிலோ மீட்டர் ஆழம் கொண்டதாக இந்த நிலநடுக்கம் இருப்பதால், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான நிலநடுக்கமாக இது கருதப்பட்டாலும், உயிர் இழப்பு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.