Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குடியரசுத்தலைவர் பிரனாபுடன் சோனியா முக்கிய ஆலோசனைக்காக சந்திப்பு

நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி முக்கிய ஆலோசனை நடத்தினார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை அரசியல் பிரச்னையாக்கி மக்களவை தேர்தலில் ஆதாயம் அடைய பாரதிய ஜனதா முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டியுள்ளார்.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தால் நாடாளுமன்றம் கடந்த 8 நாட்களாக முடங்கியிருப்பது, காங்கிரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பற்றி விவாதம் நடத்த பாரதிய ஜனதா தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 8 ம் தேதி முடிவடையவிருப்பதால், முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் சோனியா விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதனிடையே, குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியை சோனியா காந்தி சந்தித்து பேசினார். இது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றபோதிலும், நாடாளுமன்ற முட்டுக்கட்டை தொடர்பாக விவாதித்ததாக தெரிகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post