புதுச்சேரி பிள்ளை சாவடி பகுதியில் அரசு எஞ்சினீயரிங் கல்லூரியின் பின்புறம் முந்திரிதோப்பு பகுதியில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக கலால் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கலால் துறை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்பொழுது அங்கு இருந்த 3 பேர் தப்பி ஓடினர்.
அவர்களில் ஒருவர் பிடிபட்டார். மேலும், போலி மதுபான மூலப்பொருட்கள், 120 அட்டை பெட்டிகள் மற்றும் மதுபானம் தயாரிக்கும் இயந்திரம் உட்பட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. தப்பி சென்ற மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.