நேற்று முன்னாள் யாழ்ப்பாணத்தில் தாயினையும் குழந்தையினையும் கடத்திசென்ற கணவன் மனைவி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் கல்லூரி வீதியில் வைத்து குறித்த தாயும் அவரது இரண்டு வயது மகனும் கடத்தப்பட்டனர். கடத்தி கப்பம் கோரிய இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக யாழ் காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள்.
தாயையும் அவரது இரண்டு வயதுச் சிறுவனைக் கடத்தி சென்ற குற்றத்திற்காக கணவன் மனைவி ஆகிய இரு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.
கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் தாயும் மகனும் மீட்கப்பட்டுள்ளார்கள் குறித்த கடத்தலினை மேற்கொண்ட குடும்பத்தினருக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.