Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரை தொடர்வண்டி நிலையத்தை முற்றுகை செய்த நாம் தமிழர் கட்சியினர் 75 பேர் கைது

மதுரை தொடர்வண்டி நிலையத்தை முற்றுகை செய்த நாம் தமிழர் கட்சியினர்  75 பேர் கைது. 





இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்று திமிராக பேசிய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் பள்ளம் ராசுவை கண்டித்தும், இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி வழங்கக் கூடாது என்று வலியுறித்தியும் மதுரை மாவட்ட நாம் தமிழர்கள் தொடர்வண்டி மறியல் போராட்டம் செய்ய முற்பட்டனர். 

காலை 10 மணி அளவில் மதுரை கட்டபொம்மன் சிலை  அருகே நாம் தமிழர் உறுபினர்கள் ஒன்று கூடினர்.  இந்த கூட்டத்தை மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர்  திரு வெற்றி குமரன், மதுரை புறநகர் செயலாளர் திரு செங்கண்ணன், மதுரை நகர செயலாளர் திரு சிவானந்தம், நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை புலவர் மு தமிழ் கூத்தன் ஆகியோர் தலைமை ஏற்று வழிநடத்தினர். சுமார்  75 பேர்கள் கொண்ட இந்த குழு  மதுரை தொடர்வண்டி நிலையத்தில் புகுந்து தொடர்வண்டியை நிறுத்தி முற்றுகையிட்ட     திட்டமிட்டனர் . ஆனால் போராட்டக் காரர்கள் தொடர்வண்டி நிலையத்தை அடையும் முன்பே காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விட்டனர் . ஆனாலும் நாம் தமிழர்கள் விடாமல் முழக்கம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். காவல் துறைக்கும் போராட்டக் குழுவிற்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு அனைவரையும் காவல் துறை கைது செய்து மணிநகரம் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது. 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் மண்டல  ஒருங்கினைப்பாளர் வெற்றிகுமரன் 'இது ஒரு அடையாளம்  தான், நிறுத்திக்கொள்ளா விட்டால் எங்கள் போராட்ட  வடிவங்கள் தீவிரமடையும்' என்று எச்சரித்தார்.






[vuukle-powerbar-top]

Recent Post