Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மகிந்த அரசினால் ஒரு பரீட்சையைக் கூட முறையாக நடத்த முடியவில்லை - ரணில் விக்கிரமசிங்க


மகிந்த அரசினால் ஒரு பரீட்சையைக் கூட முறையாக நடத்த முடியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நாட்டிற்கு இலவச கல்வியை நாங்கள் தான் வழங்கினோம். ஆனால் இந்த அரசாங்கம் இலவசக் கல்வியை இல்லாதொழிக்க திட்டமிட்டுச் செயற்படுகிறது

இன்று அரசாங்கத்தினால் ஒரு பரீட்சையைக் கூட முறையாக நடத்த முடியவில்லை. அண்மையில் நடத்திய ஜந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாப் பத்திரம் பரீட்சைக்கு முன்பே வெளியாகிவிட்டது.

அதேபோல் நடைபெற்ற சாதாரணதர, உயர்தர பரீட்சைகளிலும் பிரச்சினைகள் எழுந்துள்ளன. 'இசட் புள்ளி பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தற்போது பல்கலைக் கழகங்களை இழுத்து மூடியுள்ளது. மாணவர்களும் விரிவுரையாளர்களும் வீதியில் இறங்கி உரிமைக்காக போராடுகின்றனர். கூடுதலான பணத்தை செலவு செய்யவேண்டிய கல்விக்கு மிகக்குறைந்தளவு பணத்தையே அரசாங்கம் செலவிடுகிறது.

முறையான அபிவிருத்தித் திட்டங்கள் எதனையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. சமூர்த்தி திட்டத்தையும் இல்லாமற் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post