ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆசனத்துக்குப் போட்டியிடாமல் ஒதுங்கியது இலங்கை
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஆசனத்துக்கான போட்டியில் இருந்து ஒதுங்கியிருக்க இலங்கை தீர்மானித்துள்ளதாக, இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு 18 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், வரும் நவம்பர் 12 தொடக்கம் 16 வரை நடைபெறவுள்ள ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தொடரில் இடம்பெறவுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பெரவையில் உள்ள 47 ஆசனங்களுக்கும் இரகசிய வாக்குகெடுப்பு மூலம் தேர்தல் நடைபெற்று வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆசனத்துக்காக இலங்கை போட்டியிட்டது.
கடுமையான பரப்புரைகளை மேற்கொண்ட போதிலும், இலங்கை அந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.
இந்தநிலையில் இம்முறை இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று இலங்கை முடிவு செய்துள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள 18 ஆசனங்களில் 5 ஆசனங்கள் ஆசிய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டவையாகும்.
பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்கொரியா, கசகிஸ்தான், ஜப்பான் ஆகியவற்றின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலேயே இந்தத் தேர்தல் நடக்கவுள்ளது.
அனைத்துலக அளவில் இலங்கை அரசு நம்பகத்தன்மையை இழந்துள்ளதாலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆசனத்துக்காகப் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளதாக கருதப்படுகிறது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆசனத்துக்குப் போட்டியிடாமல் ஒதுங்கியது இலங்கை
Reviewed by கவாஸ்கர்
on
11:00:00
Rating: 5