இலங்கை குறித்த அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன? – சென்னையில் உள்ள துணைத் தூதுவர் விளக்கம்
இலங்கையில் இனிமேல் எத்தகைய தவறுகளும் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும், அமைதியை உறுதிசெய்வதுமே அமெரிக்காவின் நோக்கம் என்று சென்னையில் உள்ள அமெரிக்காவின் துணைத்தூதுவர் ஜெனிபர் ஏ மக்இன்ரைர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்குப் பின்னர், அந்தப் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இலங்கையில் அமைதியை உறுதி செய்வதும், மேற்கொண்டு எத்தகைய தவறுகளும் நடக்காமல் இருக்க உத்தரவாதமளிப்பதும் அமெரிக்காவின் முக்கிய நோக்கம்.
முக்கிய பிரச்சினைகளில் இலங்கை முன்னோக்கி செல்லும் நிலையில், அனைத்துலக சமூகத்தின் ஏனைய கூட்டாளிகளுடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயாராகவே உள்ளது.
குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், புனர்நிர்மாணத்தை ஊக்குவிக்கவும், அரச - தனியார் கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கை குறித்த அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன? – சென்னையில் உள்ள துணைத் தூதுவர் விளக்கம்
Reviewed by கவாஸ்கர்
on
11:22:00
Rating: 5