Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்: வலி நிவாரணிகளால் வயிற்றில் ஏற்பட்ட ஓட்டை!

அதிக அளவு வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதால், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு வயிற்றில் (இரைப்பை) 4 சென்டி மீட்டர் அளவில் ஓட்டை ஏற்பட்டுவிட்டது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர், கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்துப் பார்த்த போது, மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவனது வயிற்றில், கிட்டத்தட்ட நான்கு சென்டி மீட்டர் அளவிலான ஓட்டை இருப்பது தெரிய வந்தது. 

அந்த சிறுவன் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வலி நிவாரணிகளை உட்கொண்டு வந்ததே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. சிறு சிறு தலைவலி மற்றும் சாதாரண காய்ச்சலுக்கும், வலி நிவாரணியை அதிக அளவில் எடுத்துக்கொண்டது, வயிற்றில் புண்ணை ஏற்படுத்தி அதுவே பெரிய ஓட்டையாகி விட்டது.

சிறுவனின் இரைப்பையில் ஏற்பட்டிருக்கும் ஓட்டை (மாதிரிப் படம்)

இரைப்பையில் ஓட்டை ஏற்பட்டதால், அரைக்கப்பட்ட உணவுத் துகள்கள் இரத்தத்தில் நேரடியாக கலந்து, பின்னர் கண்களில் வெளிப்பட்டு விட்டது. இதனால், மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றார். இரத்தம் வடிகட்டப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட உடன், அவர் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டார். அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ஓட்டை அடைக்கப்பட்டது. 

வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ளும்போது, கூடுதல் கவனத்துடன் இருங்கள். வலி நிவாரணிகளில் உள்ள மருந்துகள் வயிற்றில் ஏற்கனவே இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் கலந்து உக்கிரமான வினையை ஏற்படுத்தும். இதன்மூலம், வயிற்றில் கடுமையான புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இதனால், எந்த ஒரு வலி நிவாரணி எடுத்துக் கொள்ளும்போதும் வயிற்றில் அமில சுரப்பை கட்டுப்படுத்தும் மாத்திரையையும் சேர்த்து எடுத்துக் கொள்வது, கூடுதல் பாதுகாப்பை தரும். அமில சுரப்பை கட்டுப்படுத்துபவை, PPI- Proton Pump Inhibitors என அழைக்கப்படுகின்றன.  (Omeprazole, Pantaprazole, Rabeprazole போன்றவை).

[vuukle-powerbar-top]

Recent Post