மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்கு, மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து கசாப், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கசாப்பிற்கு தூக்கு தண்டனை வழங்குவதை தவிர வேறு வழி எதுவும் இல்லை என்றும், கசாப் நாடு மற்றும் நாட்டு மக்களுக்கு எதிராக போரை நடத்தியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.