Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நடிகை ஸ்ரீதேவி படத்துக்காக சம்பளம் வாங்காமல் நடித்தார் அஜித்!

நடிகை ஸ்ரீதேவி நடிக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்காக அஜித்குமார் கௌர வேடத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி வருகின்றது.


இம்மொழிகளில் நடிகை ஸ்ரீதேவியே நாயகியாக நடிக்கிறார். அதாவது ஆசிரியர் வேடம் ஏற்றுள்ளார். இந்நிலையில் தமிழில் உருவாகும் இப்படத்திற்காக கௌர வேடத்தில் நடிக்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ரஜினி நடிக்க வில்லை.

இதையடுத்து தயாரிப்பாளர் பால்கி, நடிகர் அஜித்குமாரை அணுகினார். அஜித்தும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

இரண்டு நாள்களாக இப்படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜித், 12 மணி நேரத்தில் தனது வேடத்தை ஏற்று நடித்துக் கொடுத்தார்.

சம்பளம் பற்றி தயாரிப்பாளர் பால்கி பேச, அஜித் மறுத்து விட்டாராம். நான் ஸ்ரீதேவியின் ரசிகன் என்றும் சம்பளம் தேவையில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
[vuukle-powerbar-top]

Recent Post