டாஸ்மாக் விற்பனையில் அரசு கவனம் செலுத்துவது போல், அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.தேமுதிக சார்பில் சிறைக் கைதிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது.
இதில், கலந்துகொண்டு பேசியபோது விஜயகாந்த் இவ்வாறு தெரிவித்தார். மேலும், இத்தகைய நலத்திட்ட விழாவில் தனது பேச்சை அடிப்படையாக வைத்து தன்னை கைது செய்ய தமிழக அரசு முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மின்சாரத் தடையால், திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.