சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லியான் குவான்சிலி இன்று காலை 10.50 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சரை இலங்கையின் இராணுவத்தளபதி ஜகத் ஜெயசூரிய தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
இவருடன் 24 பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்.
இவர்கள் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.