ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் இருந்து நெதர்லந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகருக்குச் சென்ற விமானம் கடத்தப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.ஆனால், இது பைலட் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு இடையே நடந்த தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் ஏற்பட்ட வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.
இதனையடுத்து பயணிகள் உள்பட அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். முன்னதாக அந்த விமானம் கடத்தப்பட்டதாக தகவல் வந்ததும் அதை நெதர்லந்து நாட்டின் 2 எஃப் 16 ரக போர் விமானங்கள் சூழ்ந்து ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் தரையிறக்கின.
விமானம் தரையிறக்கப்பட்டதும் அதை கமாண்டோ படையினர் சூழ்ந்தனர். போலீஸார் விமானத்திற்குள் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.