Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராமநாதபுரம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. வெட்டி கொலை

ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏவான காதர் பாட்சாவை (வயது 67) இன்று காலை மேலரமானாதியைச் சேர்ந்த தனசீலன் என்பவர் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இதைத் தடுக்க வந்த காதர் பாட்சாவின் உதவியாளருக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்ட காதர் பாட்சாவின் மனைவி போட்ட அலறல் சத்தத்தைத் தொடர்ந்து தனசீலன் அங்கிருந்து தப்பியோடிபோது அங்கிருந்தவர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தனசீலனும் பலியானார்.
[vuukle-powerbar-top]

Recent Post