Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விடுதலைப் புலிகளுக்கு எதிரான வியூகம் வகுக்க ரணிலுக்கு உதவிய சிஐஏ - கொழும்பு ஆய்வாளர் தகவல்


விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த உடன்பாடு செய்து கொண்ட பின்னர், அவர்களை எதிர்கொள்வதற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளை இலங்கைக்கு அழைத்து வந்ததாக இலங்கையின் இராணுவ ஆய்வாளர்களில் ஒருவரான சமிந்திர பெர்னான்டோ தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, இலங்கை இராணுவத்தினருக்கு நிபுணத்துவ இராணுவ கல்வியை வழங்குவதற்காக அமெரிக்காவை அழைக்க முடிவு செய்தார்.

இதனடிப்படையில் அமெரிக்காவின் சிஐஏ எனப்படும் மத்திய புலனாய்வுச் சேவை பிரதிநிதிகள் உள்ளூர் புலனாய்வு சமூகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக அழைக்கப்பட்டனர்.

உள்ளகப் புனனாய்வுப் பணியக மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணியக வாராந்தக் கூட்டங்களில் அமெரிக்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள இந்த சர்ச்சைக்குரிய முடிவு வழிவகுத்தது.

புலனாய்வுக் கூட்டங்களில் அமெரிக்கப் பிரதிநிதிகள் அமர்ந்திருப்பது குறித்து முன்னர் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் மெரில் குணரத்ன கவலையை வெளிப்படுத்தியதால் ஐதேக அரசின் சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அது தேவையற்ற பிரச்சினைகளை எற்படுத்தும் என்று மெரில் குணரத்ன உணர்ந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது முக்கிய ஆலோசகர்களும் குணரத்னவின் கவலையை நிராகரித்தனர்.

அப்போதைய இராணுவ, பொருளாதார சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட பின்னரே, அமெரிக்காவை அழைக்க முடிவு எடுக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் மரபுவழி இராணுவ பலத்தை எதிர்கொள்வதற்கு அப்போது இலங்கை அரசுக்கு அனைத்துலக சமூகத்தில் தங்கியிருப்பதை விட வேறு தெரிவு இருக்கவில்லை.

போருக்குப் பின்னர் தமது சமாதான முயற்சிகள் தோல்வியடைந்ததற்கான காரணங்களை ஆராய நோர்வேயின் மேற்கொண்ட மீளாய்வு அறிக்கையில் (‘Pawns of Peace: Evaluation of Norwegian Peace Efforts in Sri Lanka 1997-2009‘) ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆலோசகர்களும் அமைதி முயற்சிகளை அனைத்துலக மயப்படுத்தியதாகவும், விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று அவர்கள் நம்பியதே அதற்குக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மீண்டும் போரைத் தொடங்கினால், அமெரிக்காவும் இந்தியாவும் தனக்குப் பின்னால் நிற்கும் என்று இலங்கை அரசாங்கம் நம்பியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post