நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்யும் பேச்சுக்கு இடமில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலக்கரி சுரங்கங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள உரிமைகளை ரத்து செய்து மறு ஏலம் விட வேண்டும் என்ற பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டின் கொள்கைபடி நிலக்கரியை விற்பனை செய்வது இல்லை என்றும் இதில் ஆதாயம் பெற முடியாது என்றும் கபில் சிபல் கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒளிவுமறைவற்ற முறையில் சீராய்வு குழுக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.