Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் தொடக்கம் (காணொளி இணைப்பு)

பதினான்காவது மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் லண்டனில் கோலாகலமாக தொடங்கின. இந்திய நேரப்படி நள்ளிரவு நடைபெற்ற இந்த விழாவை, பிரிட்டன் ராணி எலிசபெத் தொடங்கி வைத்தார்.

கண்கவர் நிகழ்ச்சிகளோடு தொடங்கிய இந்த விழாவில், இளவரசர் வில்லியம்ஸ், அவரது மனைவி கேதே வில்லியம்ஸ், பாராலிம்பிக்ஸ் போட்டி ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டைன் கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாற்றத்திறனாளியான இயற்பியல் வல்லுநனர் ஸ்டீபன் ஹாகிங், ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். பிரிட்டனில் இரண்டாவது முறையாக நடைபெறும் இப்போட்டியில், ஒவ்வொரு அணியினரும், தங்கள் நாட்டு தேசிய கொடியை ஏந்தி வலம் வந்தனர். இப்போட்டிகளில், 160-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 4200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய வீரர்கள்

நீச்சல், பவர் லிஃப்டிங், துப்பாக்கிச் சுடுதல், தடகளம் உள்ளிட்ட பிரிவுகளில் 10 இந்திய வீரர்கள் களம் இறங்க உள்ளனர். மகளிர் பிரிவுகளில் ஒரு இந்திய வீராங்கனை கூட பங்கேற்கவில்லை.
[vuukle-powerbar-top]

Recent Post