அனைத்துலக காணாமல் போனோர் நாள் நிகழ்வுகள் இன்று வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது. இந்நிகழ்வில் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மனித உரிமை நிறுவனங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து கலந்து கொண்டனர்.
ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் இதுவரை இணைந்திருக்கிறார்கள். அவர்களில் அதி பெரும்பான்மையானோர் தமிழர்கள். வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் பங்கேற்றுள்ளார்கள்.
வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக நடைறும் இந்த நிகழ்வில் காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.