Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவு கேட்கும் தமிழக அரசு

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தொடர்ந்து சிறுவர்களின் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பேருந்து ஓட்டையில் விழுந்து இறந்த ஸ்ருதி முதல் இறந்த குழந்தையை எலி கடித்த நிலை வரை பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இந்த நிகழ்வுகளின் பின்னனியில் தமிழக அரசின் மெத்தன போக்கு கண்கூடாக தெரிகிறது.

இந்த நிகழ்வுகள் நடந்த பின்னரே தமிழக அரசு சில அவசர கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது இந்த மாதிரி உயிர் பலிகள் போன்ற விபத்துகள் நேர்ந்த பின்னர் தான் சம்பத்தப்பட்ட துறைகளின் மேல் தமிழக அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறது. இதன் மூலமாக காவு கொடுத்தால் தான் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா என்ற கேள்வி எழுகிறது.

ஸ்ருதி என்ற சிறுமி இறந்த பின்னர் தான் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சில வாகனங்கள் தடை செய்யப்பட்டன.

இதே போல் நீச்சல் குளத்தில் இறந்த மாணவன் விடயத்திலும் உயிர் பலிக்கு பின்னர் தான் சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது இந்த அரசு.

அன்மையில் அரசு மருத்துவமனையில, இறந்த குழந்தையை எலி கடித்த பின்னர் தான் அனைத்து மருத்துவமனைகளிலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.

மக்களும் தமக்கென்று ஒரு இழப்பு ஏற்ப்படும் போது தான் அதன் விபரீதத்தை அறிந்து அதற்கான காரணங்களை களைய ஆரம்பிக்கின்றனர். மக்களும் விழிப்புண்ர்வு இன்றி தான் உள்ளனரா? மக்களின் இந்த போக்கை அரசு தனக்கு சாதகமாக்கி கொள்கிறாதா என்றும் யோசிக்க தோன்றுகிறது.

இந்த நிகழ்வுகளையெல்லாம் மொத்தமாக வைத்து பார்க்கும் பொழுது இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு நடவடிக்கை எடுப்பதற்கு முன் தமிழக அரசு காவு கேட்கிறதா? என்று தான் நினைக்க தோன்றுகிறது.

இனிமேலாவது தமிழக அரசு தனது மெத்தன போக்கை விடுத்து,இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்காமல் இருக்க அனைத்து துறைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாக உள்ளது.

நன்றி : பிரசாந்த்
[vuukle-powerbar-top]

Recent Post