அரசு குழந்தைகள் காப்பகங்களில், சலவை இயந்திரங்கள் வாங்க முதல்வர் ஜெயலலிதா, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளார்.
சமூக நல இயக்ககத்தின் கட்டுப்பாட்டில், 27 அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் ஏழு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகி்ன்றன.
இவற்றுக்கு, தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் தரம் வாய்ந்த, 34 சலவை இயந்திரங்களை தலா மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை முதல்வர் ஒதுக்கியுள்ளதாக, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.