நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பிரதமர் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என பாரதீய ஜனதா அறிவித்துள்ளது.
பாரதீய ஜனதா செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர், டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு ஊழலில் பிரதமர் பதவி விலகக்கோரி பாரதீய ஜனதா நாடு முழுவதும் போராட்டம் நடத்தும்.
அந்த வகையில், 40 நகரங்களில் ஆகஸ்டு 31–ந் தேதி (நாளை) முதல் செப்டம்பர் 2–ந் தேதி வரை பேரணிகள், பொதுக்கூட்டங்கள், பத்திரிகையாளர் கூட்டங்கள் நடத்தப்படும். என்று தெரிவித்தார்.