ஓணம் பண்டிகையின் போது மலையாளி சமாஜத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர்கள். 50 பேர் கைது
முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு தமிழக உரிமைகளை உணர்வுகளை மதிக்காமல் இருந்தது நாம் அறிவோம். அதே போல் பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு வேண்டுமென்றே பிடிவாதமாக அணை கட்டியே தீருவோம் என்று சொல்லி வருகிறது . இருந்தும் தமிழக தமிழர்கள் மலையாளிகளை மதித்து தான் வருகிறார்கள். கேரளா பண்டிகைக்கு தமிழகத்தில் விடுமுறை அளித்து மகிழ்கிறது தமிழகம் . தமிழர்கள் தாங்களும் மலையாளிகள் தான் என்று சொல்லும் அளவிற்கு ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர்கள் கேரளா அரசையும் மலையாளிகளையும் கண்டிக்க தவறவில்லை. சரியாக அவர்களின் ஓணம் பண்டிகையின் போது மலையாளிகளை கண்டித்துள்ளனர் .
அட்டபாடியில் பவானி ஆற்றின் குறுக்கே அணைகட்ட நினைக்கும் கேரளா அரசை கண்டித்து ஓணம் பண்டிகை அன்று , கோவை மலையாளி சமாஜம் முற்றுகை போராட்டம் செய்தனர் நாம் தமிழர் கட்சியினர் . இதனால் 50 க்கும் மேற்பட்ட நாம் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.