Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பின்லேடன் பற்றிய புத்தகத்தால் சர்ச்சை

ஒசாமா பின் லேடன் கொல்லப்படும்போது, அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை என்று வெளியாகியுள்ள தகவலால் புதிய சர்ச்சை உருவாகியிருக்கிறது.

பின்லேடனைப் பிடிப்பதற்காக நடந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்காவின் அதிரடிப்படையைச் சேர்ந்த மார்க் ஓவன் என்பவர் எழுதிய புத்தகத்தில் இந்தத் தகவல் இடம்பெற்றிருக்கிறது.

“No Easy Day” என்ற இந்தப் புத்தகம் வரும் செப்டம்பர் 11-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதில் உள்ள தகவல்கள் பற்றி பிரிட்டனைச் சேர்ந்த Daily Mail இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தனது படுக்கை அறையில் இருந்து, வெளியேற முயன்றபோது, அதிரடிப்படை வீரர் சுட்ட குண்டு பின் லேடன் தலையில் பாய்ந்ததாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்லேடனின் படுக்கையறைக்குள் நுழைந்து பின்லேடனை சுட்டுக் கொன்றதாக அமெரிக்கா இதுவரை கூறிவரும் நிலையில், இந்தச் செய்தி அதற்கு முரணாக அமைந்திருக்கிறது. பின்லேடனிடம் ஆயுதம் இருந்தது என்கிற கருத்தையும் இந்தப் புத்தகம் மறுத்திருக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post